featured
latest
Wednesday, June 22, 2011
Yahoo! Tamil: News • 4 days ago
Yahoo! Tamil: News • 11:01 PM UTC+6
Yahoo! Tamil: News • 10:49 PM UTC+6
JUN 22
பென்டகன் புதிய தலைவர் லியோன் பனெட்டா
அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் புதிய தலைவராக லியோன் பனெட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்பால்: காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டம்?
பிரதமரையும், லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால் மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பங்குச்சந்தையில் சற்றே சரிவு
மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை 99 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் சரிவதும், உயர்வதுமாக இருந்து இறுதியில் வர்த்தக முடிவில் 9 புள்ளிகள் மட்டும் குறைந்து 17,550 புள்ளிகளில் முடிந்தது.
ஆவின் அலுவலகத்தில் அதிகாரி தீக்குளித்து தற்கொலை
முறைகேடு செய்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவர் ஆவின் தலைமை அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம், அலுவலகங்களில் தாக்குதல் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர்.
பெற்றோர்களின் போராட்டமும், அரசின் மவுனமும்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சாரங்கபாணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நிர்வாகம் கேட்டும் பணத்தை செலுத்தும் மாணவர்களையும், நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களையும் தனித் தனியாக பிரித்து பாடம் நடத்துவதாக கூறி பெற்றோர்களும், புரட்சிகர மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் கேள்விகளுக்கு இலங்கை ரகசிய பதில்?
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக பதிலளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பண விவகாரம்: சாய்பாபா அறங்காவலர்களுக்கு தாக்கீது
வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சாய்பாபா அறங்காவலர்கள் இரண்டு பேர்களுக்கு ஆந்திர காவல்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.
அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் மக்கள்
தாலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளைவிட இந்தியாவைத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை தரம்பிரித்து பாடம் நடத்தும் மெட்ரிக் பள்ளி
சென்னையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று கட்டணம் வாரியாக மாணவர்களை தரம் பிரித்து நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளதாக கூறுகிறது இலங்கை அரசு
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கைது
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தில் பணியாற்றிவந்த பிரிகேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு கல்லூரி முதல்வராக கண் பார்வையற்ற பேராசிரியர் நியமனம்
திருப்பூர் மாவட்டம் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி முதல்வராக கண் பார்வையற்ற பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி சென்றார் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
சிதம்பரம் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2வது முறையாக ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூன் தேர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்
இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க.வினர் இடையே மோதல்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விடுவதில் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க.வினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ரங்கசாமிக்கு ஆதரவா? வைத்திலிங்கம் பதில்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சொன்னால் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பன்னீர் செல்வம் உள்பட 4 பேர் மீது கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கு திரும்ப பெறப்படுமா? இன்று தீர்ப்பு
அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
சென்செக்ஸ் 99; நிப்டி 28 புள்ளிகள் உயர்வு
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 99.07 புள்ளிகள் உயர்ந்து 17,659.37 புள்ளிகளாக காணப்படுகிறது. இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 28.80 புள்ளிகள் அதிகரித்து 5,304.65 புள்ளிகளாக உள்ளது.
மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வங்கி ஊழியர்கள் 7ஆம் தேதி வேலை நிறுத்தம்
இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 7ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
மீனவர்களுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களுக்கு காவல்துறையின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
லோக்பால் மசோதா வரைவு குழு கூட்டம் தோல்வி
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக அரசு தரப்பு மற்றும் குடிமக்கள் பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
மகளிர் மசோதா: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
என்கவுண்டர் வழக்கு: குஜராத் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு
போலி என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment