Army recruitment camp begins in Coimbatore | ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் துவக்கம்
கோவை:கோவையில், 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கும், ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், துவங்கியது.இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம், இரண்டு ஆண்டுக்குப் பின், கோவையில் துவங்கியது. வ.உ.சி., மைதானத்தில், அதிகாலை துவங்கிய முகாமில், கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000 இளைஞர்கள் பங்கேற்றனர்.வரும் 26 வரை நடக்கும் முகாமின், முதல் நாளான இன்று, "சோல்ஜர் டெக்னிக்கல்' பணியிடத்துக்கு தேர்வு நடந்தது. கர்னல் வர்க்கீஸ் பிலிப் முன்னிலை வகித்தார்.முதல் கட்டமாக, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், நாளை, உடல் தகுதி தேர்வு நடக்கிறது.
No comments:
Post a Comment