4 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கட்சிப்பதவி பறிப்பு: ஜெ., அதிரடி: சென்னை: சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., முத்துச்செல்வி உள்ளிட்ட 4 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் கட்சிப்பதவியை பறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர 16வது வார்டு இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள எஸ். முத்துச்செல்வி எம்.எல்.ஏ., வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பில் உள்ள ரவி எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் உள்ள பா. கணேசன் எம்.எல்.ஏ., மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ள மொளச்சூர் இரா. பெருமாள் எம்.எல்.ஏ., ஆகியோர் தங்களது கட்சிப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment