Wednesday, September 5, 2012




சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 35பேர் பலியாகியுள்ளனர். மேலும் 38 பேர் படுகாயங்களுடன், விருதுநகர், சிவகாசி,மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில், ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 400க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு த‌யாரிக்கும் பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வந்தன. 40க்கும் மேற்பட்ட அறைகளில், ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

விபத்து நடந்தது எப்படி?@@ தீபாவளிப் பண்டிகைக்காக, பட்டாசுகள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது. பட்டாசுகளில் மருந்து உட்செலுத்தும் பணி 40க்கும் மேற்பட்ட அறைகளில் நடைப‌ெற்றுக்‌ கொண்டிருந்தது. அப்போது, வெடிபொருட்கள் செலுத்தும் போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்த நிலையில், ‌பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து அனைத்து அறைகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாது, வெடிபொருட்கள் இருந்த அறைக்கும் தீ பரவியது. தீ விபத்து கடுமையாக இருப்பதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு அதன் பாதிப்பு இருப்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

60 பேர் பலி?@@பட்டாசு ஆலையில் உள்ள 40க்கும் மேற்பட்ட அறைகளில் தீ பரவியுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 2க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 பேரை தாண்டும் என்று கூறப்படுகிறது.

வேடிக்கை பார்த்தவர்கள் பலியான பரிதாபம்@@வெடிமருந்துகள் ‌ வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீவிபத்தைப் பார்த்த பலர் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் 25 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தின் பாதிப்பு நெடுந்தூரம் இருப்பதால், சம்பவம் நடந்த பட்டாசு ஆலை பகுதிக்கே, மீட்புக்குழுவினரால் பல மணி நேரம் செல்ல இயலவில்லை .

சம்பவ இடத்திற்கு விரைவு@@ பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டன.. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகி்ன்றன.

சம்பவ இடத்தில் மருத்துவக்குழுக்கள்@@ விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்தில் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ரா‌ஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்நிகழ்வு@@ குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு ஆலை‌ விபத்துகளும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. 2011ம் ஆண்டு ஆகஸ்டு மா‌தம் நடைபெற்ற விபத்தில் 11 பேரும், 2010ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற விபத்தில் 4 பேர், 2009ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர், 2006ம் ஆண்டில் நடைபெற்ற விபத்தில் 7 மற்றும் 2005ம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் என ஆண்டுதோறும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதுபோல, சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் ஏற்பட்டவண்ணம் தான் உள்ளன.

அவசர உதவி தொலைபேசி எண்@@ வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரையில் மேல்சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைக்கான எண் : 0452-2532535, விருதுநகர் மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 -242017, சிவகாசி மருத்துவமனை அவசர உதவி எண் :04562 - 220301; சாத்தூர் மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 -260215; அருப்புக்கோட்டை மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 - 220624

32 உடல்கள் மீட்பு@@ பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 35 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 38 பேர்விருதுநகர், சிவகாசி, சாத்தூர், மதுரை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.படுகாயமடைந்தவர்களுக்கு 80 சதவீத அளவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

அமைச்சர்கள் விரைவு@@ சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், ராஜேந்திர பாலாஜி, வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன்உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விரைகின்றனர். முதல்வரின் உத்தரவின்பேரில், அவர்கள் சிவகாசி வருவதாக அரசு சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை தடை@@ வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு பொதுமக்கள் செல்ல தீயணைப்புத்துறையினர் தடை விதித்துள்ளனர்.தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆலை ஃபோர்மேன் கைது@@ வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக, அந்த ஆலையில் போர்மேனாக பணியாற்றி வரும் திருத்தங்கலை சேர்ந்த உதயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல்வர் நிவாரணம்: @@பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், இந்த தொகையினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment